ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட லாரி.. நிலச்சரிவில் சரிந்து விழுந்த மலைகள் - திக்.. திக்... காட்சி

Update: 2024-07-16 16:08 GMT

பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் கர்நாடகாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கார்வார் மாவட்டம் அங்கோலா தாலுகாவிற்குட்பட்ட ஷிரூர் கிராமத்தில் கனமழையால் கங்கவள்ளி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. வெள்ளத்திற்கு மத்தியில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைகள் சரிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம், நிலச்சரிவுக்கு மத்தியில் சாலையில் 2 எரிவாயு டேங்கர்கள் உள்பட வானங்களும் சிக்கியுள்ளன. ஒரு டேங்கர் லாரி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கிடையே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட டேங்கர் லாரியில் கேஸ் காசிவும் இருப்பதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்