கணவனால் கூனிகுறுகிய மனைவி... வீட்டிற்கே வந்த பிரச்சனை... இளம்பெண் விபரீத முடிவு - சிக்கிய இருவர்

Update: 2024-03-26 14:47 GMT

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த தர்ஷன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில், தர்ஷன் அந்தப் பணத்தை எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால், விரக்தி அடைந்த தர்ஷனின் மனைவி ரஞ்சிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில், ரஞ்சிதாவிடம் தகராறில் ஈடுபட்ட கடன் கொடுத்த நபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்