JUSTIN || "ஆல்பாஸ் திட்டம் ரத்து" - புதுவை மாணவர்களுக்கு அதிர்ச்சி

Update: 2024-12-24 11:17 GMT

தமிழகம், புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதன்படி புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமலில் உள்ளதால், 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் முறை ரத்து.

1-ஆம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறை டிஜிபியிடம் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டு, அதுவரை தற்போது உள்ள நடைமுறையே தொடரும். பொதுமக்களுக்கு ஹேல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்