நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ராக்கெட்டை விண்ணில் செலுத்த தேவையான கிரையோஜினிக் இஞ்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய செமி கிரையோஜினிக் இஞ்சின் தயாரிக்கப்பட்டு, பகுதி பகுதியாக சோதனை செய்யப்பட இருக்கிறது. இந்த செமி கிரையோஜினிக் இன்ஜினில் திரவ ஆக்சிஜனும், இஸ்ரோஜின் என்ற எரிபொருளும் பயன்படுத்தப்படுகிறது. செமி கிரையோஜினிக் இன்ஜினின் ஒரு பகுதியான ப்ரீ-பர்னர் இக்னிஷன் சோதனை ஏற்கனவே நான்கு
முறை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஐந்தாவது முறையாக இரண்டரை வினாடிகள் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, அதிக நேரத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.