சாதுவான யானைகள் கும்கியாக மாறி வெடித்த சண்டை படப்பிடிப்பு தளத்தில் தொற்றிய பதற்றம்
கேரள மாநிலம் கொச்சி அருகே கோதமங்கலம் வனப்பகுதியை ஒட்டி, பூதத்தான் அணைக்கட்டு எனும் இடத்தில் தெலுங்கு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட ஐந்து யானைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சாது என்ற வளர்ப்பு யானையும் மற்றொரு வளர்ப்பு யானையும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலில் காயம் அடைந்த சாது என்ற யானை அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் ஓடிச் சென்றது. காட்டிற்குள் சென்ற யானை திரும்பி வராத நிலையில், வனத்தில் யானையை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மீதமிருந்த 4 யானைகளும் மீண்டும் திருப்பி அனுப்ப பட்டன.