அடுத்த சாதனை படைத்த இஸ்ரோ | ISRO

Update: 2024-05-11 05:51 GMT

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 எஞ்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான பி.எஸ்.4 இஞ்ஜின் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த இஞ்ஜின் பரிசோதனை நேற்று இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது. அதற்குரிய கவுண்டவுன் முடிந்தவுடன் 665 வினாடிகள் என்ற இலக்கை பி.எஸ்.4 இஞ்ஜின் அடைந்து வெற்றி பெற்றது. இந்த பரிசோதனை வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த பி.எஸ்.4 இன்ஜின் வழக்கமான இன்ஜினை விட குறைவான எடையுடன் காணப்படுவதால் 97% மூலப்பொருட்கள் சேமிக்கப்படுவதாகவும், உற்பத்தி நேரம் 60% குறைவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்