மேலும் மேலும் சஸ்பெண்ட்..இன்றும் 49 எம்பிக்கள்..எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றமா? | India

Update: 2023-12-19 14:23 GMT

மக்களவை இன்று காலை கூடியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தியும், எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினர். அமளியால் மக்களவை முதலில் 12 மணி வரையிலும், பின்னர் 12.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்ட மேலும் 49 எம்பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் எம்.பி திருமாவளவன், மதிமுக எம்.பி கணேசமூர்த்தி, திமுக எம்.பி தனுஷ் குமார், காங்கிரஸ் எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், சசி தரூர் மணிஷ் திவாரி உள்ளிட்ட 49 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த சுமார் 141 எம்பிக்கள், நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்