"ED முன் கலெக்டர்கள் ஆஜராகியே தீர வேண்டும்" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Update: 2024-02-28 03:45 GMT

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மீண்டும் விசாரித்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்