கண்ணாடிகள் உடைந்து சாலை ஓரம் உருக்குலைந்து நிற்கும் தமிழக கார் - யார்? என்ன நடந்தது? பேரதிர்ச்சி

Update: 2024-10-02 07:45 GMT

கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த நகை வியாபாரிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கண்ணாடிகள் உடைக்கப்பட்ட கார் சாலை ஓரமாக நிற்க..

சுற்றிலும் போலீசார் சூழ சம்பவ இடம் பரபரப்பாகக் காணப்பட்டது...

தமிழகத்தைச் சேர்ந்த நகை வியாபாரியின் காரை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் துரத்தியுள்ளன. ஒரு கட்டத்தில் மூன்று கார்களில் இருந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கி வியாபாரியின் காரை நிறுத்தியுள்ளனர்.

காரில் இருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான 350 கிலோ வெள்ளி மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன், காரில் இருந்த நகை வியாபாரி அனில் என்பவரை காருடன் சேர்த்து கடத்தி சென்ற கும்பல் தும்கூர் மாவட்டத்தின் சாலை ஓர பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில்

சேலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி அனில் மகாதேவ் தனது மகன் உட்பட நான்கு பேருடன் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு காரில் சென்று வெள்ளி நகையை வாங்கிக் கொண்டு கர்நாடகா வழியாக தமிழகம் திரும்பும் போது தும்கூர் மாவட்டத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது.

கொள்ளை சம்பவத்தின் போது நகை வியாபாரியின் மகன் பாலாஜி உட்பட மூன்று பேர் தப்பி ஓடியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்

உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் வட மாநில வங்கி கொள்ளையர்கள் மீது என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அண்டை மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்