உயர் அதிகாரி எடுத்த அதிர்ச்சி முடிவு... அதே இடத்தில் ஆக்ரோஷமாக மாறிய ஊழியர்கள்
புதுச்சேரி கதர் வாரிய அலுவலக அதிகாரியை ஊழியர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி கதர்வாரிய தலைமை செயலகத்தில் நரேந்திரன் என்பவர் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது அலுவலக ஊழியர்கள் சிலருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு ஊழியர்களை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாத்தின்போது, இயக்குனரை ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.