காலமானார் புத்தேவ் பட்டாச்சார்யா - மம்தா இரங்கல் | Buddhadeb Bhattacharjee

Update: 2024-08-08 14:27 GMT

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.... நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்த அவர், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் மேற்குவங்க முதலமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்