லஞ்ச விவகாரம்.. மஹூவா மொய்த்ரா வழக்கு.. .ஜன.3-க்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ராவின் ரிட் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது... தனது பதவி நீக்க முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு இன்று காலை தான் கிடைத்தது என்றும், படித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.