அருணாச்சலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக.. பிரதமர் மோடி போட்ட ட்வீட்

Update: 2024-06-02 13:45 GMT

அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில்

ஏற்கனவே முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பாஜகவை சேர்ந்த 10 பேர் போட்டியின்றி தேர்வாகியிருந்தனர். 50 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் படி, பாஜக 36 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதன் மூலம் அங்கு முதல்வர் பீமா காண்டு, மீண்டும் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாஜக 41 இடங்களை கைப்பற்றி இருந்த நிலையில், இம்முறை கூடுதலாக ஐந்து இடங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்