ராணுவ வீரர்களுடன் பாட்டு பாடி நடனமாடிய அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் | Dance Video
அருணாச்சலப் பிரதேசத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவ வீரர்களுடன் அம்மாநில முதலமைச்சர் பாடல் பாடி அசத்தினார். தவாங் மாவட்டத்தில் உள்ள மகோ சுனா என்ற பகுதியில் உள்ள ராணுவ முகாமில், காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் பேமா காந்து, ராணுவ வீரர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடலை பாடினார். அப்போது, அங்கு வந்திருந்த நடிகர் ரன்தீப் ஹூடா, வீரர்களுடன் சேர்ந்து நடனமாட தொடங்கினார். பின்னர், அனைவரும் பாடலை பாடிக்கொண்டு உற்சாகமாக நடனமாடினர்