ரயில் மோதலை தடுக்க புதிய தொழில்நுட்பம்... வெற்றி கொடுத்த கவாச் சோதனை

ரயில் மோதலை தடுக்க புதிய தொழில்நுட்பம்.

Update: 2022-03-05 14:26 GMT
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் சோதனை ரயில்வே அமைச்சரின் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஹைதராப்பாத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பங்கேற்றார். ரயிலில் ஓட்டுநருடன் அமைச்சரும், எதிரே வந்த சோதனை பெட்டியில், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெற்றிருந்தனர். ரயில்வே அமைச்சர் சென்ற ரயில் குறிப்பிட்ட எல்லையை நெருங்கும் எதிரே வரும் ரயில் பெட்டியுடன் மோதுவதை தடுக்கும் விதமாக சிகப்பு எல்லை கோட்டில் ரயில் நின்றது. அதன் வேகமும் 30 கிலோ மீட்டராக குறைந்தது. இதன் மூலம் ரயில் மோதலை தடுக்கும் கவாச் தொழில்நுட்பம் வெற்றியில் முடிந்ததாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அறிவித்தார். இதையடுத்து நடப்பாண்டில் ரயில் பாதையில் 2000 கிலோ மீட்டர் துரத்திற்கு கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்