ஒவ்வொரு நாளும் ஒரு தண்டனை.. திருடனுக்கு பாடம் புகட்டிய கடவுள்.. 10வது நாளில் நிகழ்ந்த அதிசயம்
கோவிலில் சாமி சிலையைத் திருடிய திருடன் குற்ற உணர்ச்சியால் மீண்டும் சிலையை கோவிலிலேயே ஒப்படைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் நவாப் பெஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஜானகிராம் கோவிலில் உள்ள நூறு ஆண்டுகள் பழமையான அஷ்ட தாதுவால் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணர் சிலையை திருடன் ஒருவன் திருடிச் சென்றுள்ளான்... சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி கடந்த 10 நாள்களாக சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விட்டார். சிலை காணாமல் போனது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே பத்து நாள்கள் கழித்து திருடிய சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு மன்னிப்பு கடிதமும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான் அந்தத் திருடன். சிலையை திருடியது முதல் அவருடைய மகன், மற்றும் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் மோசமான கனவுகள் வந்ததைத் தொடர்ந்தும் குற்ற உணர்ச்சியின் காரணமாக சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தெரியாமல் சிலையை திருடி விட்டேன்... சிலையை திருடியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கவும் சாப்பிடவும் முடியவில்லை...' என வருத்தம் தெரிவித்துள்ளான் திருடன்...