ஆடை குறித்து அட்வைஸ்; போலீசாருடன் பெண்கள் வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ

புதுச்சேரியில் சுற்றுலா வந்த பெண்களின் ஆடை குறித்து காவலர்கள் அறிவுரை கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-02-27 14:45 GMT
புதுச்சேரியில் சுற்றுலா வந்த பெண்களின் ஆடை குறித்து காவலர்கள் அறிவுரை கூறிய வீடியோ சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த பெண்கள், அங்குள்ள தனியார் பள்ளியின் அருகே நின்றுக் கொண்டு  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த காவலர்கள் பெண்களின் ஆடை குறித்து பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்