"30.6 டிஎம்சி வழங்க வேண்டும்" - கர்நாடக அரசுக்கு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கான 30.6 டி.எம்.சி.காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-31 11:42 GMT
காவிரி நதிநீர் ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம், தலைவர் ஹல்தர் தலைமையில், டெல்லியில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. 

தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் காணொலி வாயிலாக கலந்துகொண்டன.

கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 30 புள்ளி 6 டி.எம்.சி. நீர் நிலுவையாக உள்ளதாகவும், அதை உடனடியாக திறந்துவிடுமாறும் தமிழக அரசு வலியுறுத்தியது. அண்மையில், திறந்துவிடப்பட்டது உபரி நீர் என்றும், அது கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது என்றும் கூறினர். 

மேலும், மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக தரப்பு வலியுறுத்திய நிலையில், அணை கட்டும் கர்நாடக முயற்சிக்கு கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

மேலும், 4 மாநிலங்களும் சம்மதித்தால் மட்டும் மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 

இதனையடுத்து, தமிழகத்திற்கான 30.6 டி.எம்.சி. காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் என,


கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்