தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான அதிரடி அறிவுப்பு
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான அதிரடி அறிவுப்பு
தீபாவளியைக் கொண்டாடி விட்டு சென்னைக்கு பேருந்தில் வரும் பயணிகளுக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன...
தென் மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கம் வரும் பேருந்து பயணிகள் வசதிக்காக
வரும் 4ம் தேதி திங்கள் கிழமை தென்னக ரயில்வே சார்பில் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு அதிகாலை 4 மணி, 4:30, 5 மணி, 5:45, 6.20 ஆகிய நேரங்களில் 5 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன...
இந்த ரயில்கள் அனைத்தும் பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும்,
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி, அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் ஜிஎஸ்டி சாலையோரம் உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதேபோல தாம்பரத்திலிருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05 மணி,
5.40 ஆகிய நேரங்களில் 2 சிறப்பு மின்சார ரயில்கள் காட்டாங்குளத்தூருக்கு இயக்கப்படும் எனவும்
சிறப்பு ரயில்களில் 29 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள
தென்னக ரயில்வே