"ஸ்பையாக இல்லாததால் என் வாழ்க்கை இப்படி ஆனது"-சமந்தா

Update: 2024-10-24 10:31 GMT

வருண் தவான் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் "சிட்டாடல்" என்ற இந்தி வெப் சீரிஸ் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில் இருவரும் உளவாளிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்த நிகழ்வொன்றில் பத்திரிகையாளர்கள் சமந்தாவிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் உளவாளியாக இருந்திருக்கிறீர்களா என கேள்வி கேட்டார். அப்போது, "நிஜ வாழ்க்கையில் நான் உளவாளியாக இருந்திருக்க வேண்டும்... அதை செய்யாதது என் தவறு...அப்படி இல்லாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது'' என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்... நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் விவாகரத்தாகி நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யப்போகிறார்... சோபிதா துலிபாலா உடன் நாக சைதன்யாவுக்கு ஏற்பட்ட நெருக்கத்தாலேயே சமந்தா பிரிந்ததாக தகவல்கள் உலா வந்தது... இந்நிலையில் சமந்தா இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்