`AK 64' அப்டேட் - 5வது முறையாக இணையும் வெற்றி கூட்டணி?

Update: 2024-02-05 08:29 GMT

அஜித், 'சிறுத்தை' சிவா கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் 'விடாமுயற்சி' என்ற படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தை அஜித் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 'ஏ.கே.64' படத்தை 'சிறுத்தை' சிவா இயக்கவுள்ளதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த கூட்டணியில் ஏற்கெனவே 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்' மற்றும் 'விவேகம்' ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்