பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு

Update: 2025-01-10 05:11 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெயச்சந்திரன். சிறுவயது முதலே செண்டை மேளம் மற்றும் மிருதங்கம் வாசிப்பதில் கை தேர்ந்தவராக அறியப்பட்டார்.

1965 ல் மலையாளத்தில் இவர் பாடிய முதல் பாடல் வெளியானது.


மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழில் முன்னணி இசையமமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் மூன்றுமுடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் தன் தனித்துவமான குரலால் இவர் பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.


60 ஆண்டுகளாக திரைத்துறையில் முத்திரை பதித்த ஜெயச்சந்திரன் தேசிய மற்றும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட

பல்வேறு மாநில அரசின் விருதுகளையும் வென்றிருக்கிறார்.

உணர்ச்சிகளின் பாடகர் என்று வர்ணிக்கப்பட்ட ஜெயச்சந்திரன் இந்திய இசைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

பாடகர் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்