குழந்தையுடன் வெளியே சென்ற எமி ஜாக்சன் : ஓய்வெடுக்க சொல்லி ரசிகர்கள் அறிவுரை
கர்ப்பமாக இருந்த நடிகை ஏமி ஜாக்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கர்ப்பமாக இருந்த நடிகை ஏமி ஜாக்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தை பிறந்த மூன்றே நாளில் குழந்தையுடன் அவர் வெளியே சென்றுள்ளார். எமி ஜாக்சன் குழந்தையுடன் வெளியே சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், "குழந்தை பிறந்த உடனே வெளியே செல்லக் கூடாது என்றும், 40 நாட்களாவது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.