எப்படி இருக்கிறது சாமி 2..?
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது சாமி 2...
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபிசிம்ஹா, சூரி, பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ்கான், சுதா சந்திரன், ஜான்விஜய், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து, கிரேன் மனோகர், டெல்லி கணேஷ், பாலாசிங், ஓஏ கே சுந்தர், உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்தப்படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
படத்தின் கதை...சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சை - கோட்டா சீனிவாச ராவை, ஆறுச்சாமி - விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று படம் முடிந்து இருக்கும். அதன் தொடர்ச்சியாக ஆறுச்சாமியின் மகன் ராமசாமி - விக்ரம்., டெல்லியில் தனது தாத்தா - டெல்லி கணேஷ் , பாட்டி - சுமித்ரா இருவரது பாசகவனிப்பில் வளர்ந்து ஆளாகி, ஐபிஎஸ் ஆபிஸராகி ., திருநெல்வேலிக்கே சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாக வருகிறார். பின்னர், பெருமாள் பிச்சை - கோட்டா சீனிவாச ராவின் . வாரிசுகள் பாபிசிம்ஹா, ஜான்விஜய், ஓ ஏ கே சுந்தர் மூவரும் தன் அப்பாவையும், அம்மாவையும் அநியாயமாக கொன்றதற்காக எப்படி அவர்களை பழிவாங்குகிறார்? என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஹரி.
படத்தின் பலம்...தந்தை, மகன் என இரு வித கெட்-அப்களில் நடிகர விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் வேறுபாடுகளை சிறப்பாக காண்பித்துள்ளார். நான் ஆறுச்சாமி இல்ல-ராமசாமி என இட்லியில் பீர் ஊற்றாமல் மோர் ஊற்றி சாப்பிடும் காட்சி. கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் வாம்மா, போமான்னு மரியாதையா பேசணும் என புரோகிதராக அதிரடி பண்ணும் காட்சி . "உன் கையில பேனா இருக்கு ஆர்டர் போட....என் கையில் துப்பாக்கி இருக்கு ஆள தூக்குறதுக்கு... என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ள இந்த காட்சிகளில் தியேட்டரில் விசில்.
மெயின் வில்லன் பாபி சிம்ஹா பார்வையிலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான கெட்-அப்களில் பாபி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் ஒளிப்பதிவும் அருமையாக உள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்-ன் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
படத்தின் பலவீனம்...சூரி காமெடி இந்த படத்தில் பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்குப் பிறகு இருக்கும் வேகம் படத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் இல்லை. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது முழுக்க இயக்குனர் ஹரி ஃபார்முலா படம். அவர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்து.