ரஷ்யா மீது தாக்குதலை தொடங்கிய உக்ரைன் ராணுவம் முன்னோக்கி செல்வது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

Update: 2024-08-15 14:00 GMT

எல்லையில் அணிவகுத்த உக்ரைனிய படைகள், ரஷ்யா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.


எல்லைப் பிராந்தியாமன ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில்... ரஷ்ய படைகள் மீது தாக்குதலை நடத்தியவாறு உக்ரைனிய படைகள் முன்னேறி வருகிறது.

ரஷ்ய நகரங்களில் பறக்கும் உக்ரைனிய கொடி

1,000 சதுர கிலோமீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. பிராந்தியத்தில் 28 பகுதியை உக்ரைனியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைனியப் படைகள் முன்னேற ரஷ்யப் படைகளும் தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு வருகிறது.

எல்லைப் பிராந்தியத்தில் ரஷ்யா 2 லட்சம் மக்களை வெளியேற்றியிருக்கிறது. உக்ரைன் எல்லையையொட்டி குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் மாகாணங்களில் ரஷ்யா அவசர நிலையை அமல்படுத்தியிருக்கிறது. குர்ஸ்க் பிராந்திய எல்லை நகரங்களில் இருந்து ரஷ்யா மக்களை வெளியேற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் - வியூகம் என்ன...?

ரஷ்யா மீது உக்ரைன் தொடுத்திருக்கும் படையெடுப்பு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. உக்ரைனின் கிழக்கு எல்லையில் ரஷ்ய ராணுவம் ஊடுருவலை தடுக்க முடியாமல் தடுமாறுகிறது உக்ரைன்

கடந்த பல மாதங்களாக கிழக்கு எல்லை வழியே ரஷ்ய இராணுவம் ஊடுருவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுகிறது உக்ரைன்... இப்போது, குர்ஸ்க் மாகாணத்திற்கு ஊடுருவதன் வாயிலாக கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகளை குறைக்க நிர்பந்திக்கும் என உக்ரைன் வியூகம் போடுவதாக கூறப்படுகிறது. நெருக்கடியை கொடுப்பது வாயிலாக ரஷ்யா அமைதி தீர்வுக்கு வரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கணக்கு போடுகிறார்.

உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் சுத்ஜா பகுதியில் உக்ரைனிய கொடியை பறக்க விடும் காட்சியும் வெளியாகியிருக்கிறது.


2-ம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யா மீது தாக்குதல்

இந்த படையெடுப்புக்காக சிறந்த ராணுவப் படையை உக்ரைனிய ராணுவம் களமிறக்கியிருப்பதாக தெரிகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியிருக்கும் பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதற்கு சரியான பதிலடி கிடைக்கும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து ரஷ்யா ஆயுதம் வாங்குவதாக தகவல்

ஒப்பீட்டளவில் ரஷ்ய படை வீரர்களை காட்டிலும் உக்ரைனிய படை வீரர்கள் குறைவே... இப்போது ஈரானிலிருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்குவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஷ்யாவின் குண்டுவீச்சால் உகரைனின் எரிசக்தி கட்டமைப்பு சிதைந்திருக்கிறது. ரஷ்யா இந்த தாக்குதலை தீவிரமாக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இதனை உக்ரைனும் எதிர்பார்க்காமல் இல்லை.. குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவின் எதிர்தாக்குதலை கட்டுப்படுத்த... எல்லையில் தடைகளையும் உருவாக்கிவருகிறது


இப்போது இருதரப்பும் மோதலை தீவிரப்படுத்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை மேலும் தாமதமாகும் என்றே பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்