அதிபரானதுமே ட்ரம்ப்புக்கு அடித்த யோகம் - சுக்குநூறான சக்திவாய்ந்த பெண்மணிகளின் பெருங்கனவு

Update: 2024-11-07 05:01 GMT

அமெரிக்க தேர்தலில் இரண்டு பெண்களை தோற்கடித்து டிரம்ப் அதிபராக வென்றுள்ளார். 2016 அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்து அதிபர் பதவியை முதல் முறையாக வென்றார். 2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். இப்போது மீண்டும் கமலா ஹாரிசை தோற்கடித்து அதிபர் பதவியை வென்றுள்ளார். இரு முறையும் அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபர் ஆகலாம் என்ற சாதகமான சூழ்நிலையை முறியடித்து வெற்றியை பெற்றுள்ளார்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையான செனட் சபையில் டிரம்ப் கட்சி பெரும்பான்மை பெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலோடு 34 செனட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் மேற்கு வர்ஜீனியா, ஓஹியோ, மொன்டானாவில் குடியரசு கட்சி வென்றதும் அமெரிக்க செனட் சபையில் அக்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் டிரம்ப் கட்சி பெரும்பான்மை பெற்றது. 4 ஆண்டுகளில் முதல் முறையாக டிரம்ப் கட்சி செனட்டில் பெரும்பான்மை பெற்றது.

இந்த செனட் சபை, அமெரிக்காவில் அதிபரின் நியமனங்களை உறுதிப்படுத்த அல்லது மறுப்பதற்கு அதிகாரம் கொண்ட சபையாகும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது.

இதுபோல் அமெரிக்க மக்களவையில் 218 என்ற பெரும்பான்மையை கைப்பற்றும் ரேஸில் குடியரசு கட்சி முந்துகிறது. நாடாளுமன்றத்தில் டிரம்ப் பெரும்பான்மை பெறுவது வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். 1980-க்கு பிறகு இரு அவையிலும் பெரும்பான்மை பெற்று எந்த அதிபரும் ஆட்சி அமைக்கவில்லை என்ற சாதனையை டிரம்ப் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது

Tags:    

மேலும் செய்திகள்