காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. காற்றில் சாம்பல் மற்றும் கருந்துகள்கள் காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நுரையீரல் மற்றும் இதய நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.