5 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் - பீதியில் அலறி ஓடிய மக்கள்

Update: 2025-01-10 08:32 GMT

திபெத்தில் ஒரே நாள் இரவில், 6 முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

திபெத்தின் ஜிசாங் என்ற இடத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவானது. நேபாளத்தின் காட்மாண்டுவில் பாதிப்புகள் ஏற்பட்டன. நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் சில மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலையில், திபெத்தில் தொடரும் நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆறு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் மூன்றில் ஆரம்பித்து, அதிகபட்சமாக நான்கு புள்ளி நான்கு வரை பதிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்