போலந்து நாட்டுக்கு கோலகல பயணம்... ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...

Update: 2024-09-15 09:03 GMT

யாதும் ஊரேல இன்னைக்கு நாம சுத்தி பாக்க போற நாடு... கொண்ட்டாட்டத்துக்கு பேர் போன poland

Central europe-ல இருக்குற இந்த நாட்டுல மொத்தம் பதினாறு மாகாணங்கள் இருக்கு..

பேரு குட்டியா இருந்தாலும் போலாந்து நாடு கிட்டதட்ட 38 மில்லியன் மக்கள் வாழுற அளவுக்கு பெரிய நாடு... இது மட்டுமில்லாம... சுற்றுலா தளம், ஷாப்பிங், தொழில் வளம் வேலை வாய்ப்புனு... ஏகப்பட்ட விஷயங்கள் இந்த நாட்டுக்குள்ல இருக்குறதுனால... சுற்றுலாவாசிகள் படையெடுக்குறதுல டாப் 10 நாடுகள் பட்டியல்ல 5 வது எடத்தை பிடிக்குது poland...

சரி.. சரி எல்லா தகவலும் இன்ட்ரோலையே சொல்லிட்டா டூர்ல சுவாரஸ்யம் இருக்காது... அதுனால சட்டுபுட்டுனு வந்த வேலைய ஆரமிக்கலாம் வாங்க...

போலந்துகுள்ள வந்ததும் மொதல்ல நாம சுத்தி பாக்க போற இடம்... Wroclaw..

இந்த இடத்துக்கு வந்ததும் ஆட்டோமெட்டிக்கா நான் மொபைல்ல எடுத்து செல்ஃபி எடுக்க ஆரம்பிச்சுட்டேன்... ஏனா கலர்ஃபுல்லான பில்டிங், நேர்த்தியான சாலை, ஜே ஜேனு களை கட்டுற மார்கெட்னு... ஒப்பனிங்கே பிரமிக்க வச்சுடுச்சு இந்த ஸ்பாட்...

என்ன தான்... நாம காரு, பஸ், ஏரோ பிளேன், டிரெயின்னு ஏறி டிராவல் பண்ணிருந்தாலும் ஹெலிக்காப்டர்... ஜெட் விமானத்துல ஏரி பாக்கனும்னு எல்லாருக்கும் ஒரு தீரா ஆசை இன்னுமும் இருக்க தான் செய்யுது... பட் நம்மளோட அந்த ஆசைய நிறைவேத்துறதுக்காக Polish Aviation Museum-ல ஏகப்பட்ட ஜெட் விமானமும், ஹெலிகாப்டரும் வரிசை கட்டி நிக்குது...

இதல்லாம் நம்ம ஊர்ல இதை சுதந்திர தின ஊர்வலத்துல தூரமா நின்னு பாத்தோம்... ஆனா இங்க பக்கத்துல நின்னு தொட்டு பாத்து ரசிக்கலாம்.... வாவ் பாக்கவே பயங்கரமா இருக்கு... வாங்க நருக்குனு நாளு செல்ஃபி எடுத்துட்டு போவோம்...

நம்மளாம் ஒரே நாள்ல கோடீஸ்வரர் ஆக மாட்டோமானு... பல தடவை கற்பனை பண்ணி பாத்துருப்போம்... பட் எவளோ நாள் தான் கற்பனைலயே வாழுவீங்க Krakow Pinball Museum - அ போனீங்கனா... நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்னு சொல்றாங்க இந்த ஊர்காரங்க...

போலந்து நாட்டுல புகழ் பெற்ற சூதாட்ட கிளப் தான் Krakow Pinball Museum... அதாவது பின் பால்ங்குற சூதாட்ட விளையாட்டு மூலமா... இங்க பல பேரு பணத்தை பந்தயம் கட்டி லட்சம்... கோடினு ஜெயிப்பாங்கலாம்.... சும்மா சொல்லலங்க... இங்க வெரும் கைய வீட்டு வந்த பல பேரு திரும்பி போகும் போது கை நிறைய பணத்தோட போயிருக்காங்க... வாங்க நம்மளும் டிரை பண்ணி பாப்போம்...

நம்ம ஏரியால எதாச்சும் ஒரு வீடு பாழடைஞ்சி இருந்தா... உடனே அதுக்கு பேய் வீடுனு பேர் சூட்டி அந்த வீட்டு பக்கம் திரும்பி பாக்க முடியாத அளவுக்கு ஊர் முழுக்க பயத்தை உருவாக்கி வச்சுடுவோம்... ஆனா இங்க ரியலா அமானுஸ்யமான பேய் வீட்டை டூரிஸ்ட் ஸ்பாட்டா மாத்தி... சுத்தி பாக்க வைக்குறாங்க...

அதாவது Lost Souls Alley-ங்குற டீம்... எங்களாம் அமானுஸ்யம் நிரைஞ்ச வீடு இருக்கோ அதையெல்லாம் ரெண்டுக்கு எடுத்து இப்டி ஒரு பிஸ்னஸ் பண்ணிட்டு வராங்க... நமக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு இந்த லட்சனத்துல இந்த பேய் வீட்ட வேற சுத்தனுமானு தோனுது... பேசாம வெளியே நின்னே வேடிக்கை மட்டும் பாத்துட்டு போயிடலாம்...

பொதுவா ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்ட சுத்தி பாக்க குறைஞ்சது ஒரு மணி நேரமாச்சும் ஆகுது... ஆனா அதே ஒரு மணி நேரத்துல மொத்த போலந்தையே ஒத்த பார்வைல சுத்தி பாக்க வைக்குற மாதிரி... மிரட்டலான சம்பவம் பண்ணி வச்சுருக்காங்க Kolejkowo- ங்குற மினியேச்சர் பார்க்ல...

மினியேச்சர் செட்டப்புங்குறதுனால... சும்மா ஒரு 500 ஸ்கொயர்ஃபிட்க்கு செட்டு போட்ருப்பாங்கனு பாத்தா... கிட்ட தட்ட 5000 ஸ்கொயர்ஃபிட்க்கு மிணியேச்சர் செட் அமைச்சு மிரட்டி விட்டாங்க... அதுலயும் டிரெயின், பில்டிங், ரோடுனு நிறைய விசயங்களை மைனூட்டா பிசுறு தட்டாம ரொம்பவே ரியலா இருக்குறதுனால... வீவர்ஸ்க்கு ஆச்சர்யத்தையும் பிரம்மிப்பையும் குடுக்குது இந்த இடம்...

பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களோட பெரிய கனவே சொந்தமா ஒரு வீடியோ கேம் வாங்கி விளையாடனும்குறது தான்... ஆனா அன்னைக்கு அதோட விலை 500 ரூபாய்... உண்மைய சொல்லப்போனா நமக்கு அன்னைக்கு அதலாம் பெரிய அமவுன்டு தாங்க... என்ன தான் அன்னைக்கு 500 ரூபா இல்லாம இருந்த நாம இன்னைக்கு 50,000 சம்பாதிச்சாலும் வீடியோ கேம்ம வாங்க முடியல... ஏனா பழைய வீடியோ கேம்லாம்... டெக்னாலஜிய விட்டே மறைஞ்சுடுச்சு...

ஆனா நம்ம 90ஸ் கிட்ஸ்ஸோட சோகத்தையும்.. கஸ்டத்தையும் புரிஞ்சுகிட்ட i Gier- ங்குற வீடியோ கேம் நிறுவனம்... வீடியோ கேம் கண்டு பிடிச்ச காலத்துல இருந்து... இன்னைக்கு புதுசா வெளி வந்துருக்க பிளேஸ்டேசன் வரை... என்னலாம் வீடியோ கேம் இருக்கோ அது எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சு... ஒரு பிரமாண்ட வீடியோ கேம் மியூசியத்தை உருவாக்கிருக்காங்க...

அட அட... நான் மிஸ் பண்ண.. சூப்பர் மேரியோ, கான்ட்ரா எல்லா வின்டேஜ் வீடியோ கேமும் இருக்கே... எனக்கு கண்னுலாம் வேர்க்குதுயா... யப்பா கேம் குடுத்த மகராசா நீ நல்லாருக்கனும்யா...

வடிவேல் காமெடில செத்து செத்து விளையாடளாமாங்குற மாதிரி... GOjump Park போனோம்னு வைங்க... எத்தனை தடவை வேணும்னாலும் செத்து செத்து விளையாடலாம்... அதாவது எவளோ உசரத்துல இருந்து குதிச்சாலும் ஒன்னும் ஆகாது... அப்டி ஒரு என்டர்டெயின்மென்ட்டான பிளேஸ் தான் இது...


அடுத்து நம்ம எல்லாரும் தங்கம் எடுக்க தங்க சுரங்கத்துக்கு கிளம்பலாம் வாங்க...

நம்ம ஊருக்கு எப்டி கோலார் தங்க சுரங்கமோ... அது மாதிரி போலந்து நாட்டுல இருக்க முக்கியமான தங்க சுரங்கம் தான் இந்த kopalinia gold mine...

அதாவது தங்கம் எங்க கிடைக்கும்... எப்டி எடுப்பாங்கனு... சுரங்கத்துக்குள்ளயே கூட்டிட்டு போய் சுத்தி காட்டுறாங்க... இங்க அதிக அளவு தங்கம் கிடைக்கிறதுனால.. பல வருடங்களுக்கு முன்னாடி நிறைய பணக்கார முதலைகள்... இந்த இடத்த ஆக்கிரமிப்பு செஞ்சு நிறைய மலைகள உடைச்சு... இயற்கைய அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க... இதை தடுக்குறதுக்காக போலந்து அரசங்கம் இந்த தங்க சுரங்கத்தை கை பற்றி டேக் ஓவர் பண்ணிட்டாங்க...

குறிப்பிட்ட சில இடத்தை தங்கம் எடுக்கவும் மற்ற இடங்களை மக்கள் சுத்தி பாக்குற டூரிஸ்ட் ஸ்பாட்டாவும் மாத்திட்டாங்க... சரி நமக்காச்சும் தங்க கிடைக்குதானு பாப்பபோம் வாங்க... முக்கியமா இந்த இடத்தை ராக்கி பாய்க்கு தெரியாம பாத்துக்கோங்க... அப்புறம் இங்கயும் குடிசைய போட்ருவாரு...

நமக்கு தங்கம் கிடைக்குற மாதிரி தெரில... அதுனால enerygylandia தீம்பார்க்ல... நல்லா ஒரு ஆட்டத்தபோட்டுட்டு poland நாட்டு திருவிழாக்களை கொண்டாட கிளம்பலாம் வாங்க...

திருவிழாக்கு போகலாம்ன்னு ஊருக்குள்ள வந்து பார்த்தா... இங்க ஒரு கூட்டம்... கையில சோலகாட்டு பொம்மையோட... தீய பத்த வச்சு திங்கு திங்குனு ஆடிகிட்டு இருந்தாங்க... என்ன ஏதுனு விசாரிச்சா ஏதோ Marzanna திருவிழாவாம்... அதாவது நல்ல மழை பெய்ஞ்சு நாடு செழிக்க... Marzanna-ங்குற உருவ பொம்மைய எரிச்சு ஆத்துல போடுவாங்களாம்... இப்டி பண்ணா வேண்டுதல் நிறைவேரும்குறது இவங்களோட நம்பிக்கையா இருக்கு...

சுற்றுல்லாவுக்கு எந்த அளவுக்கு ஃபேமஸோ அதே அளவுக்கு wine தயாரிக்குறதுலையும் நம்ம கெத்துக்காட்றாங்க போலாந்துகாரங்க... ஒவ்வொரு வருஷமும் திராட்சை அறுவடை காலத்த கோலாகலமா கொண்டாட நினச்ச மக்கள்... தங்களோட ஃபேவரைட் பானமான wine-ஐ சாப்பிட்டு Zielona Gora Wine Festival-ங்குற பேருல செலப்ரேட் பண்ணுவாங்க....

யாத்தே... திருவிழாவுல போட்ட ஆட்டத்துல என் வயிறு இப்போவே சத்தம் போட ஆரமிச்சுருச்சு... அதுனால பசி மயக்கத்துல விழுறதுக்குள்ள Poland நாட்டு உணவுகளை ருசிச்சு சாப்பிடலாம் வாங்க...

வெளியூருக்கு வந்து கண்ட சாப்பாட சாப்பிடாம ஸ்டிரிக்ட் டயட் ஃபாலோ பன்றவங்களுக்கு முட்டையில சமைக்குற Zurek சூப் பெஸ்ட் சாயிஸ்...

நமக்கு எடுக்குற பசிக்கு சூப்லான் செட்டாகாதுனு நினைக்குறவங்க... நாளு துண்டு பிரெட்டோட காரசார bigos வச்சு சாப்பிட்டு பாருங்க... வயிறு மட்டுமில்ல... நம்ம மனசும் நிறைஞ்சிடும்...

எவ்வளோதா சாப்பிட்டும் டிராவல்ல எடுக்குற குட்டி பசியை சமாளிக்க Pierogi-ய சாப்பிட்டே ஆகனும்...

சாயங்கால டீ காப்பிக்கு Racuchy பேன்கேக் டிரை பண்ணி பாருங்க... அதுகப்புறம் இதுக்காவே மறுபடியும் போலந்து வருவீங்க...

சுற்றுல்லாதளம், சுவாரஸ்யம், சுவையான உணவுன்னு அள்ள அள்ல ஆச்சரியம்... திகட்ட திகட்ட சந்தோஷம் நிறைந்த போலாந்து நாட்ட... நான் பயங்கரமா என்ஜாய் பண்ணேன்... வாய்ப்பு கிடைச்சா நீங்களும் மறக்காம என்ஜாய் பண்ணுங்க....

Tags:    

மேலும் செய்திகள்