விண்வெளியில் வெளியேறிய உடல் திரவங்கள்.. எலும்பும் தோலுமாக சுனிதா.. உலகை உலுக்கிய காட்சி

Update: 2024-11-14 08:11 GMT

தன் உடல்நிலைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையெனவும், தான் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். எதனால் இந்த விளக்கம் ?... சுனிதா வில்லியம்ஸ்க்கு என்ன ஆனது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

நாசா விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸின் இந்த புகைப்படமே ஒட்டுமொத்த பரபரப்புக்கும் காரணம்..

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 150 நாள்களுக்கும் மேலாக வசித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், எலும்பும் தோலுமாக உடல் மெலிந்துபோய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது...

கூடவே அவரின் உடல்நலம் தொடர்பான வதந்திகளும் காட்டுத்தீயாய் பரவியது...

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சக நாசா விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய இருவரும், 150 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்த புகைப்படம் வெளியாகவே அவரின் முந்தைய படங்களை ஒப்பிட்ட இணையவாசிகள், சுனிதா வில்லியம்ஸின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பதிவிட்டு வந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது...

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

தனது உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை எனவும், முன்பை விட தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், உடலில் இருந்து திரவங்கள் வெளியேறுவதால், இந்த உடல்நிலை மாற்றம் சகஜமான ஒன்றுதான் எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

கூடவே, நாசா செய்தித் தொடர்பாளர் ஜிமி ரசல் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா வீரர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், அனைவரும் நல்ல உடல்நல ஆரோக்கியத்துடனே இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்