#BREAKING || இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

Update: 2024-08-11 03:49 GMT

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நேற்று மாலை பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற ஆறுகாட்டுதுறை மீனவர்கள் மீது கோடியக்கரை அருகே தாக்குதல். 4 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், வழிமறித்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல். மீனவர்களின் படகுகளில் இருந்த 700 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, செல்போன், தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் காயமடைந்த சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன், செல்வ கிருஷ்ணன் ஆகிய 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி. கடற்கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து, வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை. மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

Tags:    

மேலும் செய்திகள்