சிரியாவை தொடர்ந்து முக்கிய நாட்டின் அதிபருக்கு நேர்ந்த கதி - உற்று நோக்கும் உலகநாடுகள்
தென் கொரிய அதிபர் யூன் சூக் யோலை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி யோல் திரும்பப் பெற்றார். அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் சமீபத்தில் தோல்வி அடைந்ததால் அந்நாட்டு கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அதிபரை பதவி நீக்கம் செய்யக்கோரி தலைநகர் சியோலில் ஆயிரக்கணக்கான மக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபரை கட்டாயம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோஷம் எழுப்பினர்.