ஸ்மார்ட்போன்கள் விற்பனை - ஆப்பிளை முந்திய சாம்சங்

Update: 2024-04-16 00:25 GMT

Card 1

உலக அளவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை, 2023 முதல்

காலாண்டில் 26.8 கோடியாக இருந்து, 2024 முதல் காலாண்டில் 28.9 கோடியாக 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Card 2

ஆனால், ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை 2024 முதல்

காலாண்டில், 5.01 கோடியாக, கடந்த ஆண்டின் இதே

காலகட்டத்தை விட 10 சதவீதம் சரிந்ததுள்ளது.

Card 3

அதே சமயத்தில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை அளவு

6.01 கோடியாக அதிகரித்து, ஸ்மார்ட்போன்கள் சந்தையில்

முதலிடத்தை பிடித்துள்ளது.

Card 4

2024 முதல் காலாண்டில், ஸ்மார்ட்போன்கள் மொத்த

விற்பனையில் சாம்சங்கின் பங்கு 20.8 சதவீதமாகவும்,

ஆப்பிளின் பங்கு 17.3 சதவீதமாகவும் உள்ளன.

Card 5

14.1 சதவீத சந்தை பங்குடன் சியோமி மூன்றாம் இடத்திலும்,

9.9 சதவீத சந்தை பங்குடன் டிரான்சியன் நான்காம்

இடத்திலும் உள்ளன.

Card 6

ஒப்போ நிறுவனம் 8.7 சதவீத சந்தை பங்குடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதர நிறுவனங்களின் சந்தை பங்கு 29.3 சதவீதமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்