ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார்

Update: 2024-05-01 11:01 GMT

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, 10 நாட்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்று அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில், தியான நிகழ்ச்சிக்கு அங்கோர் தொல்லியல் பூங்காவை சத்குரு தேர்ந்தெடுத்தது மூலம் தாங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கம்போடியா பிரதமருக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, கம்போடியாவின் நினைவுச் சின்னங்கள், கலாச்சாரம் மனித புத்தி கூர்மைக்கும் உறுதிக்குமான ஒரு பிரமிக்க வைக்கும் அஞ்சலியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்