நெருங்கும் கிறிஸ்துமஸ்... கண்களை கவரும் இந்த காட்சி
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் புகழ்பெற்ற
ராக்பெல்லர் மையத்தில் கிறிஸ்துமஸ்
மரம் அமைக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் உயரமுடைய அந்த கிறிஸ்துமஸ்
மரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதை காண திரண்ட ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.