தன்னை தானே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நபர் - ஆனா `அந்த' விஷயத்துக்கு மட்டும் Strictly No-வாம்..!

Update: 2025-01-11 06:02 GMT

ஜப்பானில் சரிவர வேலை செய்யாததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் தன்னைத் தானே வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தவிப்பவர்கள் மோரிட்டோவை வாடகைக்கு எடுக்கிறார்கள். அப்படி வாடகைக்கு எடுப்பவர்களுடன் உரையாடுவது, வீடியோ காலில் பேசுவது, அவர்களுடன் வெளியில் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மோரிட்டோ, ஒரு போதும் பாலியல் ரீதியான அணுகுமுறைக்கு உடன்பட்டதில்லை. இதுகுறித்து மோரிட்டோ அளித்த பேட்டி ஒன்றில், தமக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பு வருவதாகவும், இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஒருவருடன் நேரத்தை செலவிட 16,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்