கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, தன்னுடனான உறவு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு (Stormy Daniels), டிரம்ப் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நடிகைக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகளில், அவர் குற்றவாளி என கடந்த ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜனவரி 10-ம் தேதி அவருக்கு தண்டனை அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்றும், அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு இதுவே தண்டனை என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அமெரிக்க வரலாற்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர் அதிபர் பதவி ஏற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.