இறந்த ஆண்களை கொண்டு குழந்தை பெற்றுகொள்ள போட்டிப்போடும் பெண்கள் - அதிசயம்... உண்மை..அது எப்படி?

Update: 2024-08-26 09:59 GMT

#israel | #sperm | #medical

இறந்த ஆண்களை கொண்டு குழந்தை

பெற்றுகொள்ள போட்டிப்போடும் பெண்கள்

அதிசயம்...ஆச்சரியம்...உண்மை..அது எப்படி?

இஸ்ரேலில் இறந்த வீரர்கள் விந்தணுக்களை சேமிப்பது அதிகரித்து இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

அக்டோபர் 7... இஸ்ரேல் வரலாற்றில் மறக்க முடியாத கருப்பு நாள்... காசா எல்லையை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் 1,200 பேரை கொன்றதோடு, 251 பேரை பிணைக் கைதியாக பிடித்துச் சென்றனர்.

அப்போது சடலங்களாக விழுந்த இளைஞர்களை வைத்து கதறியவர்களுக்கு சிறு நம்பிக்கை ஒளியை ஏற்றியது அவர்களது விந்தணுவை பிரித்தெடுக்கும் நடைமுறை... தங்கள் மகன்கள் உயிரணுவில் பேரக்குழந்தைகளை பார்க்கலாம் என்று பலரும் அந்த நடைமுறைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அதற்கு விதிக்கப்பட்ட சட்ட நிபந்தனைகள் அவர்களை கோபமாக்கியது.

பெற்றோர்கள், தங்கள் மகனின் விந்தணுக்களை சேமிக்க நீதிமன்ற உத்தரவை பெற வேண்டும் என்ற நடைமுறையை பின்னர் அரசு தளர்த்தியது. தொடர்ந்து விந்தணுக்களை எடுத்து உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலிய குடும்பங்கள் விண்ணப்பம் செய்தன.

இறந்த ராணுவ வீரர்கள் மற்றும் இளைஞர்கள் என கிட்டத்தட்ட 170 பேரிடம் விந்தணுக்கள் எடுக்கப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தோராயமாக 15 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

இறந்த உடலில் விந்தணு பிரித்தெடுப்பது என்பது விந்தணு தானத்திலிருந்து மாறுபட்டது. இறந்தவர் உடலில் விதைப்பையில் இருந்து சிறிய திசு எடுக்கப்படும். அதிலிருந்து உயிருள்ள விந்தணுக்கள் எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் விந்தணுக்கள் ஆய்வகத்தில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். தேவைப்படும் போது கருவுறுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இறந்த பிறகு எவ்வளவு நேரத்தில் விந்தணுவை எடுக்க வேண்டும் என்று கேட்டால், மனிதன் இறந்த பிறகு விந்தணுக்கள் 72 மணி நேரம் உயிர்வாழும் என சொல்லும் மருத்துவ வல்லுநர்கள், இறந்த பிறகு 24 மணி நேரங்களில் விந்தணுக்களை பிரித்து எடுப்பது சிறந்தது எனவும் சொல்கிறார்கள்.

இப்போது இஸ்ரேலில் விந்தணுவை உறைய வைப்பது சுலபமாகிவிட்டாலும், அதை கருத்தரிப்புக்கு பயன்படுத்த இறந்தவரின் மனைவியோ அல்லது அவரது பெற்றோரோ, இறந்தவர் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுவும் சவால் நிறைந்தது எனச் சொல்லப்படுகிறது.

ஷமீர் மருத்துவ மையத்தின் விந்தணு வங்கியின் இயக்குனர் இடாய் காட் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இறந்தவர்களிடம் விந்தணுக்களை எடுக்கும் நடைமுறையை முதலில் எதிர்த்ததாகவும், போரில் இறந்தவர்களின் குடும்பங்களிடம் பேசியபோது அந்த எண்ணம் மாறிவிட்டது எனவும் சொல்கிறார். மேலும், இங்குள்ள விதிப்படி, இறந்தவர்களிடம் இருந்து எடுத்த விந்தணுவை கருத்தரிக்க பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக குறிப்பிட்டார். ஆம்... குழந்தை பெற, இறந்தவர்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்தது தொடர்பாக தெளிவான பதில் இல்லை என்கிறார் இடாய் காட்.

ஏப்ரல் மாதம் காசாவில் உயிரிழந்த 20 வயது ராணுவ வீரர் Reef விந்தணுவை அவரது பெற்றோர் பெற்று உறைய வைத்துள்ளனர். ரீப் உயிரோடு இருந்தபோது குழந்தை பெற்றுக்கொள்ள அதிக ஆசை கொண்டார், ஆனால் அவருக்கு பெண் தோழி கிடையாது, எனது மகன் கதையை சொன்னதும் பல பெண்கள் குழந்தை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள் என ரீப் தந்தை அவீ ஹாரூஸ் கூறியிருக்கிறார்.

மகனின் டைரிகள், புகைப்படங்கள், நினைவுப் பொருட்களை பாதுகாக்கும் அவீ ஹாரூஸ்... தனது மகனுக்கு ஒரு குழந்தையை கொடுக்கும் வரையில் ஓயப்போவது இல்லை என்கிறார்...

பெரும் போராட்டத்திற்கு பிறகு இறந்தவர் விந்தணுவில் பிறக்கும் குழந்தை தந்தை இல்லாமல் வளரும் என தங்களுக்கு தெரியும் என சொல்லும் மருத்துவர் இடாய் காட், அந்த குழந்தை... தங்கள் குழந்தையை இழந்தவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது... ஆறுதலை அளிக்கிறது என நெகிழ்ந்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்