தரைமட்டமான 2 மாடி கட்டிடம்... சிக்கிய 90 வயது மூதாட்டி 5 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
புத்தாண்டன்று ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய 90 வயது மூதாட்டி 124 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது... 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், சுஜு நகரில் இடிந்து விழுந்த 2 மாடிக்கட்டடத்தில் இருந்து 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்... ஜப்பான் நிலநடுக்கத்தில் இதுவரை 126 பேர் பலியான நிலையில், மாயமான 200 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.