கவிழ்ந்த பிரான்ஸ் அரசு விடாப்பிடியாக இருக்கும் அதிபர்...

Update: 2024-12-06 03:11 GMT

கவிழ்ந்த பிரான்ஸ் அரசு விடாப்பிடியாக இருக்கும் அதிபர்...

பிரான்சில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசு தோல்வி அடைந்த நிலையில், அதிபர் பதவியை தாம் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

பிரான்சில் பிரதமர் மைக்கேல் பார்னியர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், தாம் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்றும், வரும் 2027-ஆம் ஆண்டு மே மாதம் வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும் இமானுவேல் மேக்ரான் கூறினார். மேலும், புதிய பிரதமரை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்