பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி - எகிறும் எதிர்பார்ப்பு | France | Pm Modi
பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 10, 11-ல், பாரிஸில் நடைபெறும் இந்த செயற்கை தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர், மாநாட்டில் பங்கேற்பதுடன், 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 26 ரஃபேல் எம் ரக போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.