பேக்டரியில் திடீரென பற்றி எரிந்த தீ...பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள செயிண்ட் மேரீஸ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தொழிற்சாலையில், திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. இதையடுத்து, அருகே உள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனிடையே, தீ விபத்து தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.