மக்கள் வெளியே செல்ல வேண்டாம்..அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் | America

Update: 2025-01-06 07:57 GMT

பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் 2 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மேற்கு நெப்ராஸ்கா ஆகிய இரு மாநிலங்களில் பனிப்புயலால் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை (07/1/25) வரை பனிப்புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரம், மிசெளரி மாகாணம் கேன்சஸ் நகர் உள்பட பல்வேறு இடங்களில் பனிகட்டி மலை போல் குவிந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்