இயற்கைக்கு இரையான அமெரிக்கா.. நொறுங்கிய 6 கோடி பேர்.. வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்

Update: 2025-01-07 09:04 GMT
  • அமெரிக்காவை, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்புயல் புரட்டிப்போட்டுள்ளது. சுமார் 6 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம் தான். ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வீசிவரும் கடுமையான பனிப்புயல் அந்நாட்டையே முடக்கிப்போட்டுள்ளது.
  • ஆர்க்டிக் பகுதியைச் சுற்றிவரும் குளிர்ந்த காற்றே, நிலைமை இவ்வளவு மோசமடைய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • பல மாகாணங்களில் சுமார் 15 முதல் 30 செண்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிபோய் உள்ளது.
  • நூற்றுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் முடிந்தளவு பயணங்களை தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான விமானங்களும் ரத்தானதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
  • கென்டக்கி(Kentucky), விர்ஜீனியா(virginia), கான்சஸ்(Kansas) உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 மாகாணங்களில் நிலைஅமை மோசமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்புயலின் தாக்கம் நீடிக்கக்கூடும் என்பதால், கடும் குளிரோடு, மின்தடை மற்றும் இயற்கை எரிவாயு தடுப்பாட்டையும் அமெரிக்கர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்