ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கன் பகுதியான மொகானி கிராமத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சில வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.