யஷ்வந்த் வர்மா விவகாரம் - வெடித்த வழக்கறிஞர்கள் போராட்டம்

Update: 2025-03-25 17:35 GMT

சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் நீதிபதிகள் மாற்றப்படும் இடமாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் மாறியுள்ளதாக வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நீதிபதிகளை அலகாபாத்துக்கு மாற்றுவதால், மற்ற நீதிபதிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்படும் ஆபத்து நிலவுவதாக குற்றம் சாட்டினர். இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவை கைவிடும் வரை, ஸ்டிரைக் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்