வங்கக்கடலில் தெரிந்த மாற்றம்...சென்னையை புரட்டி எடுத்த பேய் மழை...வார்னிங்... உஷார்...!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அடையாறு, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், எக்மோர், அண்ணா நகர், பெரம்பூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதே போன்று, பம்பல், பல்லாவரம், போரூர், மதுரவாயல், பாடி போன்ற புறநகர் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.