தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்ற பேருந்து.. ஏணியில் தொங்கிய இளைஞர் - அதிர்ச்சிகர வீடியோ
கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் பேருந்து பின்புற ஏணியில் தொங்கியபடி இளைஞர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... அந்த இளைஞர் யார் என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.