மகனை தீ வைத்து எரித்த தந்தை.. - "என் கணவர் கொலைகாரன் இல்லை" - கதறும் மனைவி
ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் பெற்ற தந்தையே தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 8ம் தேதி திருமலை செல்வன் - சுகன்யா தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில், கணவன் திருமலை செல்வன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்தார். இதில் 4 வயது மகன் நிகில் 70 சதவீத தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.ஏற்கனவே சுகன்யா கொடுத்த புகாரின்பேரில் திருமலை செல்வனை போலீசார் கைது செய்தனர்.