மதுரை மாவட்டம் வி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு.இவர் பகுதி நேர ஒட்டுநராக வேலை பார்த்து வந்து இருக்கிறார். நேற்று மாலை நண்பர்களுடன் மது அருந்தச் செல்வதாகக் கூறி சென்றவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். இந்த நிலையில் உண்டாங்கல் மலைப் பகுதி அருகே உள்ள மதுபானக்கடை அருகே படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்து இருக்கிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்